வார்த்தைகள் வெறும் எழுத்துக்கள் மட்டும் அல்ல. அர்த்தமும், அனர்த்தனமும் இன்னும் எல்லாமுமான வார்த்தைகளுடன் நான்.
Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts
Sunday, March 10, 2013
Thursday, June 28, 2012
உள்ளொளி
அறச்சீற்றத்தோடு கவிதை எழுத அமர்கையில்
குழந்தை அழுதது
விளையாட்டு காட்டிவிட்டு வந்து
குறைச்சீற்றத்தோடு துணுக்காவது எழுதலாமென்றால்
பால்காரன் வந்துவிட்டான்
நுரைச்சீற்றத்தோடு காஃபி போட்டுவிட்டு
மன எழுச்சிக்காக பாத்ரூம் போனேன்.
குழந்தை அழுதது
விளையாட்டு காட்டிவிட்டு வந்து
குறைச்சீற்றத்தோடு துணுக்காவது எழுதலாமென்றால்
பால்காரன் வந்துவிட்டான்
நுரைச்சீற்றத்தோடு காஃபி போட்டுவிட்டு
மன எழுச்சிக்காக பாத்ரூம் போனேன்.
Thursday, January 5, 2012
பனிக்காலம்

பின்னிரவின் வாடைக்காற்று
மெல்ல பின் வாங்கும்
இடைவிடாது நாய்கள் குரைக்கும்
நடு வீதியை தாண்டி
விசுவாசமாய் தொடரும்
மங்கிய நிலா வெளிச்சத்தில்
உன் வீடு
அழகாய் இருக்க்கிறது.
உனக்கானவை
நீண்ட இடைவெளியை கடந்து
கவிதை எழுதுகிறேன்.
மொழியில் சரளம்
சற்றே பிடிபட மறுக்கிறது
வார்த்தைகள் தொண்டையில்
சிக்கிக் கொண்ட முள்ளாய்
முரண்டு பிடிக்கிறது
எதுகையும் மோனையும்
எதிரெதிரே பயணிக்கின்றன.
சந்திப் பிழைகளும்
சந்தப் பிழைகளும்
சகஜமாகி விட்டன
இலக்கணம் சேராத
வரிகள் என்றாலும்
அழகாய் இருக்கிறது
உன்னை பற்றிய
கவிதை.
கவிதை எழுதுகிறேன்.
மொழியில் சரளம்
சற்றே பிடிபட மறுக்கிறது
வார்த்தைகள் தொண்டையில்
சிக்கிக் கொண்ட முள்ளாய்
முரண்டு பிடிக்கிறது
எதுகையும் மோனையும்
எதிரெதிரே பயணிக்கின்றன.
சந்திப் பிழைகளும்
சந்தப் பிழைகளும்
சகஜமாகி விட்டன
இலக்கணம் சேராத
வரிகள் என்றாலும்
அழகாய் இருக்கிறது
உன்னை பற்றிய
கவிதை.
தோஷம்
சர்ப்பம் நெளியும்ஊர்ந்து முகம் உரசும்
கனவில்
தொடர்பின்றி துரத்தும்
வால்களின் இடுக்கில்
புரளும் நீண்ட முடிக்கற்றை.
தேகம் மின்ன
வரி வரியாய் வனப்பாய்
கால்கள் தழுவி
விரலிடுக்கில் உறக்கம்
செந்தீ முனை நாக்கு
திசை தேடிய பயணத்தில்
என்னிதழ் பற்றி
உமிழ் நீர் பருகிய
கீறலும் உரிந்த பச்சை
தோல் மிச்சமும்
விடிந்த பின் சொன்னாள்
நீண்டு வளைந்த காதணி
தொலைந்து போயிற்றென்று
Subscribe to:
Comments (Atom)
